- பாலி
- CBCIT
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- சட்டமன்ற
- கந்தர்வகோட்டை சின்னத்துரை
- மார்க்சிஸ்ட்
- தேனம்பேட்டை
- தின மலர்
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற காவல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கந்தர்வகோட்டை சின்னத்துரை (மார்க்சிஸ்ட்) பேசுகையில், ‘‘சென்னை தேனாம்பேட்டை பகுதியில் ஒரு கும்பல் 3 ஆண்டுகளாக ஏழை-எளிய பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் நெஞ்சத்தை பதற வைக்கிறது. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு 3 மாத காலத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்,
அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து கூறும்போது, ‘‘இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புலன் விசாரணையில் வேறு மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டும் என்ற சூழல் எழுந்துள்ளதால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்’’ என்றார்.
The post பள்ளி மாணவிகளை பாலியில் தொழிலில் தள்ளிய விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.