×
Saravana Stores

ஷபாலி 205, மந்தனா 149 இந்தியா 525/4


சென்னை: தென் ஆப்ரிக்க மகளிர் அணியுடனான டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 525 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 ஓவரில் 292 ரன் சேர்த்து மகளிர் டெஸ்ட் வரலாற்றில் உலக சாதனை படைத்தது. மந்தனா 149 ரன் (161 பந்து, 27 பவுண்டரி, 1 சிக்சர்), ஷுபா 15, ஷபாலி 205 ரன் (197 பந்து, 23 பவுண்டரி, 8 சிக்சர்), ஜெமிமா 55 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 525 ரன் குவித்துள்ளது.

கேப்டன் ஹர்மன்பிரீத் 42 ரன், ரிச்சா கோஷ் 43 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா முதல் நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 525 ரன் குவித்தது, டெஸ்ட் வரலாற்றில் (ஆண்/பெண்) ஒரே நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக சாதனை படைத்தது. முன்னதாக, இலங்கை ஆண்கள் அணி 2002ல் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த டெஸ்டின் (கொழும்பு) 2வது நாளில் 9 விக்கெட் இழப்புக்கு 509 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

The post ஷபாலி 205, மந்தனா 149 இந்தியா 525/4 appeared first on Dinakaran.

Tags : Shabali 205 ,Mandhana ,India ,Chennai ,South Africa Women ,MA Chidambaram Arena ,Chepakkam ,Shabali ,Mandana ,Dinakaran ,
× RELATED பழங்குடியினரின் வாழ்க்கையை வரையறுக்கும் தீபாவளி!