- பிறகு நான்
- தேனி போலீஸ்
- துணை ஆய்வாளர்
- மாயன்
- காட்டு பத்திரகாளியம்மன் கோவில்
- தேனி நகர் பழைய பேருந்து நிலையம்
- போடி குயவர் பாளையம்
தேனி, ஜூன் 28: தேனி நகர் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள காட்டு பத்திரகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் தேனி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி குயவர் பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் அரவிந்தன் (30) தேனி அருகே பின்னதேவன் பட்டியைச் சேர்ந்த கருணாநிதி மகன் தமிழரசன் (31) இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
இருவரையும் போலீசார் விசாரித்த போது, அவர்களிடம் 22 மது பாட்டில்கள், ரூ.1450 இருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் மதுபார் உரிமையாளர் விஜயன் மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர் அமரேசன், மேற்பார்வையாளர் மணிகண்டன் ஆகியோரிடம் இருந்து மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும், லாபத்தை அனைவரும் பகிர்ந்து கொண்டதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அரவிந்தன், தமிழரசன், விஜயன், அமரேசன், மணிகண்டன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அரவிந்தன், தமிழரசனை கைது செய்தனர்.
The post மது விற்ற வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.