×
Saravana Stores

திண்டுக்கல் அருகே தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல், ஜூன் 28: திண்டுக்கல்லை அருகே சிறுமலை பழையூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (32). இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் சம்பவத்தன்று தாழக்கடையில் உள்ள அவரது உறவினர் தோட்டத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Satish Kumar ,Sirumalai Palayoor Anna Nagar ,Mariammal ,
× RELATED எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்களின் இட...