- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- மேட்டூர் அணை
- டெல்டா மாவட்டம்
- சங்கம்
- மு.கே ஸ்டாலின்
சென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், ₹206 கோடியில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்தாண்டு 12.6.2024 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட இயலாத சூழ்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ₹78.67 கோடியில் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி உள்ளது. 2024-25 காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ₹105ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ₹130ம் கூடுதல் ஊக்கத் தொகையாக அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக பல்வேறு மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், தஞ்சாவூர் – அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் கோவிந்தராஜ், திருச்சி – தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் (தமிழக விவசாயிகள் சங்கம்) மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன், விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் பசுமை வளவன், தஞ்சாவூர் – தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர், உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் பார்த்திபன், வாலாஜாபாத் வட்டாரம் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ஆறுமுகம், காஞ்சிபுரம் மாவட்டம் – உழவர் நண்பர் சந்திரமோகன்,
இந்திய விவசாயிகள் சங்க தனபதி, காஞ்சிபுரம் மாவட்ட விவசாய சங்க அமைப்பாளர் ஞானப்பிரகாசம், செங்கல்பட்டு மாவட்டம் – பாலாறு படுகை விவசாயிகள் சங்க தலைவர் தனசேகரன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, வேளா ண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் அபூர்வா உடனிருந்தனர்.
The post நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாய சங்க நிர்வாகிகள் நன்றி appeared first on Dinakaran.