- வேளாண் பல்கலைக்கழகம்
- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
- துணை
- வேந்தர்
- கீதாலட்சுமி
- தேசிய மாணவர் சங்கம்
- இந்திய பாதுகாப்பு அமைச்சகம்
- விவசாய பல்கலைக்கழகம்
கோவை: தேசிய மாணவர் படை சார்பில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு கவுரவ கர்னல் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதனை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு உறுப்பு கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படைக்கு துணைவேந்தர் ஆற்றிய பணியை போற்றும் வகையில் இவ்விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கவுரவ கர்னல் பதவிச்சின்னம் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதனை தேசிய மாணவர் படை மையம் (தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர்) துணை இயக்குநர் ஜெனரல் காமடோர் அதுல்குமார் ரஸ்தோகி வழங்கினார். மேலும், வேளாண் பல்கலையின் 14வது துணைவேந்தரான கீதாலட்சுமி, இந்த பெருமையை பெறும் 4வது துணைவேந்தர் ஆவார். இந்தியாவிலேயே இந்த கவுரவ பதவி சின்னத்தை பெறும் முதல் பெண் துணைவேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வேளாண் பல்கலை துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் பதவி appeared first on Dinakaran.