×

லியோவில் நடிக்கிறாரா கமல்? உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னையில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இது லோகேஷின் எல்.சி.யூ. கதையாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் விருது விழா ஒன்றுக்கு வந்த லோகேஷ் கனகராஜிடம், என்ன லோகி உங்கள் லியோ படத்தின் கதை எல்.சி.யூவா என கேட்டதற்கு, அது பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டார்.

லோகேஷ் பதில் அளிக்காவிட்டாலும் லியோ படத்தின் கதை எல்.சி.யூ தான் என ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் லியோ படத்தில் கலை இயக்குநராக வேலை செய்து வரும் சதீஷ் குமார் கொடுத்த அப்டேட் ரசிகர்களின் சந்தேகத்தை உறுதி செய்துவிட்டது. தி ஈகில் இஸ் கமிங் என்கிற வாசகம் அடங்கிய கழுகு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சதீஷ்குமார். அதை பார்த்த ரசிகர்களோ, புரிந்துவிட்டது. ஈகில் என்றால் விக்ரம் படத்தில் கமலின் கதாபாத்திரம்.

அப்படி என்றால் லியோ படத்தில் கமல் ஹாசன் நடிக்கவிருக்கிறார். கமல் நடிக்கிறார் என்றால் இது கண்டிப்பாக எல்.சி.யூ. கதை தான் என்கிறார்கள். லியோ படத்தின் கதை எல்.சி.யூவாக இருந்தால் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் படத்தில் கவுரவத் தோற்றத்தில் வருவார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

The post லியோவில் நடிக்கிறாரா கமல்? உற்சாகத்தில் ரசிகர்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal ,Lokesh Kanagaraj ,Chennai ,Lokesh ,LCU ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar