×
Saravana Stores

பெண்ணிடம் சில்மிஷம் செய்த பஞ்சாயத்து: பாஜ தலைவர் பேசும் ஆபாச ஆடியோ


விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜ தலைவராக இருப்பவர் முன்னாள் எம்எல்ஏ கலிவரதன். இவர் அவ்வப்போது சர்ச்சை புகாரில் சிக்குவது வழக்கம். இவர் ஏற்கனவே பாஜ மகளிர் அணி நிர்வாகி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கட்சி தலைமையிலும், எஸ்பி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அவரை மாற்றக்கோரி விழுப்புரம் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் பல போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
இதனிடையே பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக நிர்வாகி ஒருவருடன் பாஜ மாவட்ட தலைவர் பேசும்போது, பதிலுக்கு அவரும் ஆபாச வார்த்தைகளால் கழுவி ஊற்றிய ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பாஜ தலைவர் கலிவரதனின் லேட்டஸ்ட் ஆடியோ, இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குடும்ப பெண்கள் யாரும் இதை கேட்காதீர்கள் என்று பதிவிட்டு ஆடியோவை வைரலாக்கியுள்ளனர்.
அந்த ஆடியோ விவரம்:
கலிவரதன்: ஏய் தம்பி, எக்ஸ் எம்எல்ஏ விஏடி கலிவரதன் பேசுறன்
நிர்வாகி: சொல்லுங்கண்ணா, சொல்லுங்கண்ணா
கலிவரதன்: உனக்கு வயசு என்னப்பா ஆகுது
நிர்வாகி: ஏதோ ஆகுது, விஷயத்த சொல்லுணா

கலிவரதன்: யோவ் 40 வயது இருக்குமா?
நிர்வாகி: 50கூட இருக்கும் விஷயத்த சொல்லுங்க
கலிவரதன்: யோவ் கேக்ரதுக்கு பதில் சொல்லு, உன் வித்தையெல்லாம் காட்டிட்டிருக்காத.
நிர்வாகி: என் வயதை எதற்கு கேட்கிறீங்க, நீங்க சரியா பதில் சொன்னா நானும் சொல்வேன்.
கலிவரதன்: ஒரு மாவட்ட தலைவர் கேட்டா இப்படிதான் பதில் சொல்வியா?
நிர்வாகி: நீ மாவட்ட தலைவரா இரு, சிஎம்மாகூட இரு, விஷயத்துக்கு வாங்க.
கலிவரதன்: அந்த பொண்ணுகிட்ட என்ன உனக்கு சில்மிஷம்

நிர்வாகி: எந்த பொண்ணுகிட்ட
கலிவரதன்: அந்த போஸ்ட் ஆபிஸ்ல வேலை செய்யுதே அந்த பொண்ணுகிட்ட
நிர்வாகி: அந்த பொண்ணு உங்களுக்கு எப்படி தெரியும்.
கலிவரதன்: யோவ் இன்னாயா? இப்படிலாம் கேள்வி கேட்கிற என்னிடம்
நிர்வாகி: அந்த பொண்ணு பிரச்னை பண்ணுச்சா, நா பிரச்னை பன்னனா தெரிஞ்சுகிட்டு பேசனும். பொதுவா உனக்கு என்ன பிரச்னைன்னு என்னிடம் கேட்கக்கூடாது
கலிவரதன்: ஏய் தம்பி எதுவாக இருந்தாலும் இனிமேல் எங்களமாதிரி முக்கியமானவங்க கிட்ட பேசு. அவங்க குடும்பத்த பேசாத. அப்புறம் வேற மாதிரி போய்விடும்.
நிர்வாகி: என்ன பண்ணிடுவீங்க
கலிவரதன்: பன்ற நேரத்தில் பன்ற, வைடாங் (ஆபாச அர்ச்சனை).

இவ்வாறு பேசியதாக ஆடியோவில் வைரலாகிறது.
பதிலுக்கு நிர்வாகி போன் செய்து மாவட்ட தலைவர் கலிவரதனை எங்க அம்மாவை அந்த வார்த்தை சொல்லி எப்படி பேசலாம் என்று 1 நிமிடத்திற்கு மேலாக ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார். அதில், கட்சியில் உன்னை மானாவாரியாக திட்டியுள்ளார்கள், பெண்ணிடம் சில்மிஷம் செய்த நீ வந்து பஞ்சாயத்து செய்ரயா?. உனக்கு யாரு மாவட்ட தலைவர் பதவி கொடுத்தது. உன் அம்மாவ கேட்டா பொறுமையா இருப்பியா?. கிளியனூரில் பசங்க அடிக்கும்போது நாங்கதா வந்து தடுத்தோம். நாங்களெல்லாம் கொடி புடிச்சு வளர்த்த கட்சி, நீயெல்லாம் எப்ப வந்த, உங்கிட்ட போய் கொடுத்திருக்கிறார்கள் என்று பேசியுள்ளார். இதை கேட்டு கலிவரதன் நொந்து நூடுல்சாகி போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டாராம். இந்த ஆடியோ தற்போது பரபரப்பாக வைரலாகியுள்ளது.

The post பெண்ணிடம் சில்மிஷம் செய்த பஞ்சாயத்து: பாஜ தலைவர் பேசும் ஆபாச ஆடியோ appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,MLA ,Kaliwaratan ,Southern District Baja ,Bajaj ,President ,
× RELATED விழுப்புரம் நகரில் மாடுகள் கூட்டமாக...