தென்காசி: குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மூன்றாவது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. பழைய குற்றாலத்தில் 2வது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது. புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாக சீசன் நன்றாக உள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக பகல் வேளைகளில் அவ்வப்போது மழை தூறிக் கொண்டே இருக்கிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுகிறது.
ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக வருகிறது. தண்ணீர் அதிகமாக விழுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மூன்றாவது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. பழைய குற்றாலத்தில் இரண்டாவது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது. புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். சீசன் அருமையாக இருந்தும், அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தும், பிரதான அருவிகளில் குளிக்க முடியாத சூழல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
The post குற்றாலம் அருவிகளில் இன்று 3வது நாளாக குளிக்க தடை appeared first on Dinakaran.