திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள பூங்காக்களில் நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு இடம் இருக்குமானால் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் நகராட்சியில் 13, 14, 17, 18 மற்றும் 20வது வார்டுகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதில் வருமாறு: திருவள்ளூர் நகராட்சிக்கு இந்த ஆண்டு புதிய கட்டிடம் கட்டித் தரப்படும்.
புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மூலம் நகரப்புறத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் விரைவில் வழங்கப்படும். திருவள்ளூரில் உள்ள பூங்காக்களில் நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு இடமிருந்தால் அதிகாரிகளைக்கொண்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
The post திருவள்ளூரில் உள்ள பூங்காக்களில் நீர்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.