×

தேமுதிக ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து, தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேமுதிக சார்பில் அரசை கண்டித்து மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வ அன்புராஜ் கலந்துகொண்டு, கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசினார்.  இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

The post தேமுதிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Democratic ,Kanchipuram ,DMD ,Kallakurichi ,Kanchipuram District Democratic Party ,Kanchipuram District Collector ,Democratic Party ,Dinakaran ,
× RELATED எனது தோல்விக்கான காரணம் கடவுளுக்கு...