×

கலைஞர் பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி மருத்துவம் படிக்கும் மாணவிக்கு மடிக்கணினி: உத்திரமேரூர் எம்எல்ஏ வழங்கினார்


மதுராந்தகம்: மதுராந்தகத்தில், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி, மருத்துவம் படிக்கும் ஏழை மாணவிக்கு மடிக்கணினியினை உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வார்டு பகுதியில் மின் இணைப்பு இல்லாமல் குடிசை வீட்டில் வசித்து வரும் திமுக கிளை செயலாளர் நாகூரான் மகள் அமிர்தம் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏவிடம், தற்போது மருத்துவம் படித்து வருவதால் மடிக்கணினி வழங்குமாறு திமுக கிளை செயலாளர் நாகூரான் மற்றும் அவரது மகள் அமிர்தாம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இக்கோரிக்கையின்படி, கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பேரூர் துணை செயலாளர் ஆர்.ரஞ்சித் குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் எஸ்.சரண்ராஜ் ஆகியோரின் ஏற்பாட்டில், ₹50 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணி மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார் தலைமையில் கடப்பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, மருத்துவம் படிக்கும் மாணவிக்கு மடிக்கணினி மற்றும் ஊக்க தொகையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவை தலைவர் இனியரசு, பேரூர் செயலாளர் மோகன்தாஸ், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post கலைஞர் பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி மருத்துவம் படிக்கும் மாணவிக்கு மடிக்கணினி: உத்திரமேரூர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,MLA ,Madhurandakam ,K. Sundar ,Maduradakam ,Chengalpattu district ,Seyyur ,Idakkalinadu ,
× RELATED உத்திரமேரூர் – மதுராந்தகம் இடையே அரசு...