திருப்பூர்: திருப்பூர் அருகே அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் பூலுவப்பட்டி பழனிச்சாமிநகரை சேர்ந்தவர் சிவானந்தம் (36). இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை பூலுவப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு ஆமை ஒன்று நகர்ந்து சென்றது. இதனை கவனித்த அவர் சாலையில் அதிகளவு வாகனங்கள் வரும் என்பதால், உடனே ஆமையை பாதுகாப்பாக மீட்டு, தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி வனத்துறை ஊழியர் சிவமணி என்பவர் சம்பவ இடத்திற்கு சென்றார்.அப்போது ஆமையை பார்த்தபோது அது அரியவகை நட்சத்திர ஆமை என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஆமையை சிவானந்தம் குடும்பத்தினர் வனத்துறை ஊழியரிடம் ஒப்படைத்தனர். சாலையில் மீட்கப்பட்ட அரிய வகை ஆமை நஞ்சராயன் குளத்தில் கொண்டுவிடப்பட்டதாக வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார். மேலும், இந்த அரிய வகை ஆமை எப்படி வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்….
The post திருப்பூர் அருகே அரியவகை நட்சத்திர ஆமை மீட்பு appeared first on Dinakaran.