×

விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு சென்னையில் உடல் உறுப்புகள் தானம்

*நெல்லையில் வாலிபர் உடலுக்கு அரசு மரியாதை

நெல்லை : சென்னையில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த நெல்லை வாலிபர் உடலுக்கு அதிகாரிகள் அரசு மரியாதை செலுத்தினர்.
நெல்லை மேலப்பாளையம் தாய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் (39). சென்னையில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு கிஷோர்குமாருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை சென்னையில் தானம் செய்தனர். பின்னர் அவரது உடல் நெல்லை கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக தாய்நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு அரசு சார்பில் நெல்லை ஆர்டிஓ (பொறுப்பு) ஜெயா அரசு மரியாதை செலுத்தினார். பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு சென்னையில் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nellai ,Kishore Kumar ,Nellai Melapalayam Thainagar ,
× RELATED நெல்லையில் மாநகராட்சி பள்ளி...