கரூர், ஜூன் 25: கரூர் வெள்ளியணை குளத்தை தூர்வார கலெக்டரிடம் கோரிக்ைக மனு கொடுக்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், கரூர் மாவட்டம் வெள்ளியணை தென்பாகம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: வெள்ளியணை பெரியகுளத்தை தூர்வார பலமுறை மனு கொடுத்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த குளத்தில் சீத்த முட்செடிகள் அகற்றப்படவில்லை. கரைகள் உயர்த்தப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, குளத்தை து£ர்வாரினால் பல விவசாயிகள் பயனடைவார்கள்.எனவே, குளத்தை நேரில் பார்வையிட்டு, தூர்வாரிட தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post வெள்ளியணை குளத்தை தூர்வார கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.