பெரியகுளம், ஜூன் 25: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது நேற்று முன்தினம் கும்பக்கரை அருவியில் ஏராளமானோர் விடுமுறை தினம் என்பதால் அருவியல் உல்லாசமாக குளித்துச் சென்றனர். இந்நிலையில், கும்பக்கரை அருவியில் குளித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அருவியில் தனது இரண்டு பவுன் (சவரன்) செயினை கும்பக்கரை அருவிப் பகுதியில் தொலைத்துவிட்டார்.
அருவிப்பகுதியில் பல்வேறு இடங்களில் தேடியும் செயின் அவருக்கு கிடைக்கவில்லை. இது குறித்து, செந்தில்குமார் வனத்துறையினரிடம் தகவல் அளித்தார். உடனடியாக வனச்சரகர் டேவிட் ராஜ் உத்தரவின் பேரில் அருவி பகுதியில் வனத்துறையினர் செயினை தேடினர். அருவிப்பகுதியில் கிடைத்த செயினை வனத்துறையினர் எடுத்து வனச்சரகர் டேவிட் ராஜுடம் ஒப்படைத்தனர். அவர் சுற்றுலா பயணி செந்தில்குமாரிடம் உரிய விசாரணை செய்து அந்தச் செயினை அவரிடம் ஒப்படைத்தார்.
The post கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணி தவறவிட்ட செயின் மீட்பு appeared first on Dinakaran.