×
Saravana Stores

மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா

மோகனூர், ஜூன் 25: மோகனூர் ஒன்றியம்இ பேட்டப்பாளையம் ஊராட்சி கீழபேட்டப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் (23ம் தேதி) வடிசோறு படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. நேற்று பால்குடம், தீர்த்தக்குட ஊர்வலத்துடன் காவிரி ஆற்றில் இருந்து உற்சவர் அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் குண்டம் இறங்கினர். கோயில் பூசாரி முதலில் குண்டத்தில் இறங்கியதை தொடர்ந்து ஏராளாமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுதினர். மேலும், பெண்கள் தீவாரி கொட்டும் நிகழ்வும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

The post மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா appeared first on Dinakaran.

Tags : Dimithi Festival ,Mariamman Temple ,Mohanur ,Ani month festival ,Mariyamman Temple ,Keezhapettapalayam ,Pettappalayam ,Vadisoru ,Swami ,
× RELATED போலியோ தடுப்பு விழிப்புணர்வு பேரணி