×

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒரு மாதத்தில் அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையில் எய்ட்ஸ் ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒரு மாதத்தில் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை (காங்) ேகட்ட கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறுகையில், ‘ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையில் 5 டயாலிஸிஸ் இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. உறுப்பினர் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ரத்த பரிசோதனை இயந்திரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஒரு மாதத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் ரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒரு மாதத்தில் அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur Government Hospital ,Minister ,M. Subramanian ,Sriperumbudur ,Welfare ,Hospital ,Sriperumbudur Selvaperunthakai ,Cang ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்...