×

ரஷ்யாவில் உள்ள 2 தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் பலி

மாஸ்கோ: மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள 2 தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழ்ந்துள்ளனர். தாகெஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரரஷ்யாவின் தெற்கே உள்ள தாகெஸ்தான் மாகாணத்தில் பல வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 15 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு பாதிரியார் துப்பாக்கி ஏந்திய நபர்களால் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், மதவழிபாட்டு தலங்களை தீவைத்து கொளுத்தினர்.அதேபோல், டர்பெண்ட் நகரில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடந்த நகரங்களுக்கு கூடுதல் படையினர் விரைந்துள்ளனர்.

பயங்கரவாதிகள் – பாதுகாப்புப்படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்றது. பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசைநிகழ்ச்சி நடந்த அரங்கில் புகுந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டனர்.

The post ரஷ்யாவில் உள்ள 2 தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Dagestan ,on 2 ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் தேவாலயங்களை குறிவைத்து...