×

அம்மன் கோயிலில் தாலி திருட்டு

 

பண்ருட்டி, ஜூன் 24: பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ளது சிறுதொண்டமாதேவி கிராமம். இக்கிராமத்தில் தில்லை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம்போல் பூசாரி கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலையில் கோயிலை திறக்க வந்து பார்த்தபோது கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த மாங்கல்யம் மற்றும் குண்டு உள்ளிட்ட 15 கிராம் தங்க நகையை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலராமன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

The post அம்மன் கோயிலில் தாலி திருட்டு appeared first on Dinakaran.

Tags : Amman ,Phanrutti ,Siruthondamadevi ,Gadampuliyur ,Thillai Kaliamman Temple ,Thali ,Amman Koil ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பாப்பாத்தி அம்மன் கோயிலில் தீமிதி நிகழ்ச்சி