×

ரயில் மோதி பஸ் புரோக்கர் பலி

 

சின்னசேலம், ஜூன் 24: சின்னசேலத்தில் ரயில் மோதி பஸ் புரோக்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.சின்னசேலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் அரசு பஸ் புரோக்கராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகேஸ். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு இவரது தந்தை பெருமாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அன்றிலிருந்து செல்வராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருந்து வந்தார்.

மேலும் யாரிடமும் சரிவர பேசுவதில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் அருகில் உள்ள ரயில் தண்டவாளம் பகுதியில் செல்வராஜ் கழிப்பிடம் சென்றதாக தெரிகிறது. அப்போது சுமார் 4 மணியளவில் விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் ரயில் மோதி செல்வராஜ் இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரயில் மோதி பஸ் புரோக்கர் பலி appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Selvaraj ,Gandhi Nagar ,Mahes ,Dinakaran ,
× RELATED ரயில் மோதி பஸ் புரோக்கர் பலி