×

நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைத்தது ஒன்றிய சுகாதார அமைச்சகம்

சென்னை: நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை ஒன்றிய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். முதுநிலை நீட் தேர்வின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யும் பொருட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததால் சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திடீரென ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வால் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். தேர்வெழுத நீண்ட தூரம் பயணித்து வெளியூர் சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

 

 

 

The post நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைத்தது ஒன்றிய சுகாதார அமைச்சகம் appeared first on Dinakaran.

Tags : UNION MINISTRY OF HEALTH ,Chennai ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த...