×

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் பேசியதாவது: 2023ம் ஆண்டு வெள்ளப்பெருக்கில் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் போதாது. இதனை ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும். எம்எல்ஏக்கள் தொகுதி நிதி ரூ.3 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும்.

செட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் டிஆர்பி தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரத்து செய்யப்பட்ட செட் தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘‘எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியை எதற்கும், எப்படியும் பயன்படுத்தலாம் என்று உள்ளது. அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்றார்.

The post எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,MLA ,Prince ,water supply department ,Dinakaran ,
× RELATED குளச்சலில் விளையாட்டு மைதானம் தமிழக அரசுக்கு காங். பாராட்டு