×

உலக செல்பி தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுடன் செல்பி எடுத்த ஆசிரியை

 

வேதாரண்யம், ஜூன் 22: வேதாரண்யம் அடுத்த ஆதனூர் சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் உலக செல்பி தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன், வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவியர்களுக்கு செல்போன் பயன்பாட்டின் நன்மை குறித்தும் அதனை முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் எனவும் ஆசிரியை வசந்தா அறிவுரை வழங்கினார். இதை தொடர்ந்து அவர்களுடன் செல்போன் எடுத்து கொண்டார். பின்பு மாணவ மாணவிகள் தனித்தனியாகவும், குழுவாகவும் ஆசிரியர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தங்களின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

The post உலக செல்பி தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுடன் செல்பி எடுத்த ஆசிரியை appeared first on Dinakaran.

Tags : World Selfie Day ,Vedaranyam ,Aadhanur Sundaresa Vilas Government Aided School ,Vasantha ,Arumugam ,Ravindran ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆலிவர் ரெட்லி ஆமைகள்