×

தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பெண்கள், திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டுள்ள அறிப்புகள் வருமாறு:

 தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

 பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி ரூ.24.90 லட்சம் செலவில் வழங்கப்படும்.

 தொழிற்சாலைகளில் பயன்பாட்டில் உள்ள நவீன தொழில்நுட்ப யுத்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ரூ.15 லட்சம் செலவில் பயிற்சி வழங்கப்படும்.

 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களுக்கு ரூ.29.65 லட்சம் செலவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

 தமிழ்நாடு தொழிலாளர்கள் கல்வி நிலையத்தில் நிர்வாக அலுவலகம் மற்றும் கணினி தொடர்பான வசதிகள் மேம்படுத்தப்படும்.

 புதிதாக வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் மற்றும் பிற தொழில் வாய்ப்புகள் குறித்து ஊடாடல் காணொலி காட்சிப்பதிவுகள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிப்பரப்படும்.

 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள வகுப்பறைகளில் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வசதி ரூ.10.11 லட்சம் செலவில் ஏற்படுத்தி தரப்படும்.

 அரசு தொழிற்பயிற்சி நிலைய விடுதிகளில் ரூ.92 லட்சம் செலவில் நூலகங்கள் அமைக்கப்படும்.

The post தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பெண்கள், திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Workers' Welfare Board ,Minister ,CV Ganesan ,Chennai ,Labor Welfare and Skill Development Department ,Tamil Nadu Legislative Assembly ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி...