பொன்னமராவதி, ஜூன் 21: பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சியில் உள்ள கேசராபட்டி கலையரங்கம் முன்பு கோமாரி நோய் தடுப்பு பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்களை தடுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
கால்நடை உதவி மருத்துவர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் துணைத் தலைவர் ரோஜாபாணு, வார்டுஉறுப்பினர் மகபத்நிசா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கேசராபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் பயனடைந்தனர். மேலும் இந்த கால்நடை தடுப்பூசி பணியானது கால்நடை மருத்துவமனை உள்ள ஆலவயலை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வருகிற ஜூன் 30ம்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளதாக கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post பொன்னமராவதி அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.