×

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!!

சென்னை : கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் குடித்தனர். அவர்களில் பல பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் 91 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த கோர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபர் சார்பில் வழக்கறிஞர் செல்வம் உள்ளிட்டோர் முறையீடு ஒன்றை முன்வைத்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் பற்றிய வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளா ர். மதுவிலக்கு பிரிவு அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து முறையீடு மனுவாக தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,CPI ,Chennai ,Kallakurichi Vishcha Saraya ,Karunapuram ,Kallakurichi district ,Kalalakurichi Vishch Saraya ,Dinakaran ,
× RELATED இந்து கோயிலில் சாய் பாபா சிலைகளை...