×

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் பலி எண்ணிக்கை 34-ஆக உயர்வு: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரி கோமதி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் விஷச் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை வாங்கி குடித்த சிலருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தற்போது வரை இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்தனர்.

கள்ளக்குறிச்சியில் 22 பேரும், சேலத்தில் 8 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் உயிரிழந்தார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரி கோமதி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். விஷச்சாராயம் விற்கப்பட்டதாக கூறப்படும் கருணாபுரம் பகுதியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையை துரிதப்படுத்த சிபிசிஐடி ஐ.ஜி. அன்புவும் கள்ளக்குறிச்சி விரைகிறார்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் பலி எண்ணிக்கை 34-ஆக உயர்வு: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி appeared first on Dinakaran.

Tags : CBCID ,Kallakurichi ,CPCID police ,Gomati ,Kannkutty ,Karunapuram ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்...