×

கோழிக்கடை ஊழியரை வழிமறித்து சரமாரி தாக்குதல் மார்த்தாண்டத்தில் 2 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம், ஜூன் 20: மார்த்தாண்டம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ராஜு. அவரது மகன் ஆகாஷ் (20). மார்த்தாண்டத்தில் உள்ள கோழிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 1 மணியளவில் ஆகாஷ் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே வந்து கொண்டிருந்த போது கிள்ளியூர் சடையன்குழி பகுதியை சேர்ந்த அபிஷாந்த் (27) மற்றும் விரிகோடு முண்டவிளையை சேர்ந்த வினித் (27) ஆகியோர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் இருவரும் ஆகாஷை திடீரென வழிமறித்தனர்.

மேலும் இந்த மார்த்தாண்டத்தில் நான் தான் ரவுடி எனக்கூறி ஆகாஷின் கழுத்தை பிடித்து அபிஷாந்த் நெரித்தாராம். பின்னர் இருவரும் சேர்ந்து கீழே கிடந்த கம்பை எடுத்து ஆகாஷை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஆகாஷ் புகார் அளித்தார். இதன்பேரில் ஆகாஷை தாக்கிய அபிஷாந்த் மற்றும் வினித் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோழிக்கடை ஊழியரை வழிமறித்து சரமாரி தாக்குதல் மார்த்தாண்டத்தில் 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Marthandam ,R.C. Raju ,Akash ,Gandhi Maidan ,
× RELATED ஆகாஷ் மாணவர்கள் ஜெஇஇ தேர்வில் சாதனை