×

நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் சிலைகளை பழைய இடத்திற்கு மாற்றுங்கள்: சபாநாயகருக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி: பழைய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தின் நுழைவாயில் பகுதியில் இருந்த மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் சமீபத்தில் அகற்றப்பட்டு ஒரே இடத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு ‘உத்வேக ஸ்தலம்’ என பெயரிடப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இது குறித்து மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று எழுதிய கடிதத்தில், ‘‘நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு தலைவர்களின் சிலையும், அதன் இருப்பிடத்துடன் மகத்தான மதிப்பையும் முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தன. ஆனால் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல், தன்னிச்சையாக சிலைகள் மாற்றப்பட்டது ஜனநாயகத்தின் அடிப்படை உணர்வை மீறுகிறது. நாடாளுமன்ற விதிகள், மரபுகளுக்கு எதிரானது. நாடாளுமன்ற வளாகத்தில் தேசியத் தலைவர்கள் உருவப்படங்கள் மற்றும் சிலைகளை நிறுவுவதற்கான குழு 2019 முதல் அமைக்கப்படவில்லை. எனவே, காந்தி, அம்பேத்கர் மற்றும் பிற தேசியத் தலைவர்களின் சிலைகள் உரிய மரியாதையுடன் மீண்டும் அதன் பழைய இடங்களுக்கே மாற்றப்பட வேண்டும்’’ என கூறி உள்ளார்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் சிலைகளை பழைய இடத்திற்கு மாற்றுங்கள்: சபாநாயகருக்கு கார்கே கடிதம் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Ambedkar ,Karke ,NEW DELHI ,Mahatma Gandhi ,Speaker ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்களுக்கு உரிமைகளும்...