×

குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும்: தலைவர்கள் அறிக்கை

சென்னை: குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்கள் நியமிப்பதை அரசு கைவிட வேண்டும் என்று தலைவர்கள்;

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: ஒப்பந்த அடிப்படையில் தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து ஓட்டுநர் – நடத்துனர் நியமனங்களுக்கான ஒப்பந்த புள்ளியை போக்குவரத்து துறை கோரியுள்ளது. போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு படியாக தற்போது ஓட்டுநர், நடத்துனர் நியமனங்களை தனியார் வசம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதோ என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்வதுடன், முறையாக பணியமர்த்த நடவடிக்கை வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஒபிஎஸ்: ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயிற்சியைப் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவது நியாயம் அல்ல.

பாமக தலைவர் அன்புமணி: தனியார் நிறுவனத்தால் அனுப்பப்படும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட குறைவான அளவில் கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கும் நிலை ஏற்படும். ஊதியம் தவிர, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த உரிமையும் வழங்கப்படாது. மேலும் எந்த வகையான இட ஒதுக்கீடும் இருக்காது. எனவே, தமிழக அரசு குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை கைவிட வேண்டும். போக்குவரத்துத்துறை பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (திருநெல்வேலி) பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை ஏற்பாடு செய்ய ஒப்பந்தபுள்ளிகள் வரவேற்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரந்தரப் பணிக்காக காத்திருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தமிழக அரசு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை காலம் தாழ்த்தாமல் நிரப்பியிருக்க வேண்டும். இவ்வேளையில் காலிப்பணியிடங்களில் நிரந்தர பணியாளராக நியமிக்கப்பட வேண்டுமே தவிர ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்க முற்பட்டால் ஒப்பந்த பணியில் சேர்பவர்கள் பிற்காலத்தில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை முன் வைத்து போராடக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

The post குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும்: தலைவர்கள் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Transport Department ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேயர் பிரியா கண்டனம்