அரவக்குறிச்சி, ஜூன் 19: பக்ரீத் பண்டிகை முன்னிட்டு அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி உழவர் சந்தையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள, 9 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது. பள்ளபட்டியில் உலவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இங்கு இடைத்தரகர் இன்றி நேரடியாக நூகர்வோர்க்கு விற்பனை செய்வதால் விவசாயிகள் நல்ல லாபம் கிடைக்கின்றது. அரவக்குறிச்சி பள்ளப்பட்டி யில் அமைந்துள்ள உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தினந்தோறும் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து லாபம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இஸ்லாமியர்கள் சிறப்பு பண்டிகையான பக்ரீத் பண்டிகை முன்னிட்டு உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அதிகரித்து ஒரே நாளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 9.130 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் சுமார் 45 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்திருந்த காய்கறிகள் மற்றும் பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
பசுமையான தரமான காய்கறிகள் நியாயமான விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் இடைத்தரகர் இன்றி நேரடியாக விற்பனை செய்வதால் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் கூறினார்கள். மேலும் பள்ளபட்டி உழவர் சந்தையில் ஒட்டப்பட்டுள்ள கியூ ஆர் கோடு மூலம் விவசாயிகளும் நுகர்வோர்களும் பள்ளபட்டி உழவர் சந்தை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனை தெரிவிக்கலாம் என உலவர் சாந்தை நிர்வாக அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.
The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.5 லட்சம் 9 டன் காய்கறி பழங்கள் விற்பனை appeared first on Dinakaran.