×

தூத்துக்குடியில் மீனவர் பைக் எரிப்பு

தூத்துக்குடி, ஜூன் 19: தூத்துக்குடி சாமுவேல்புரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் மகன் சஞ்சய் (25). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர், தனது பைக்கை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர்கள் அவரது பைக்கிற்கு தீ வைத்துள்ளனர். யாரும் கவனிக்காததால் பைக் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து சஞ்சய் அளித்த புகாரின் பேரில் முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தீ வைத்து எரிக்கப்பட்டதா? என்பது குறித்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் மீனவர் பைக் எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Fisherman ,Tuticorin ,Thoothukudi ,Sanjay ,Samuelpuram, Thoothukudi ,
× RELATED இருசக்கர வாகனங்களில் தனியாக...