×

திருவாடானை அருகே சாலையில் கவிழ்ந்த மாம்பழம் ஏற்றிய லாரி

திருவாடானை, ஜூன்19: திருவாடானை அருகே தினையத்தூரில் தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேளாங்கண்ணியில் இருந்து கேரளா செல்வதற்காக மாம்பழம் லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டினை இழந்து திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. சரக்கு வேனில் ஏற்றி வந்த மாம்பழங்கள் சாலையில் சிதறி கிடந்தன. சிறிது நேரத்தில் மாற்று வாகனம் கொண்டு வந்து மாம்பழங்களை சேகரித்து எடுத்துச் சென்றனர். அதிகாலையில் சாலையில் சென்ற வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அந்த சமயத்தில் பெரிய அளவில் வாகனங்கள் வராததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. சரக்கு வேனை ஓட்டி வந்த பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணனுக்கு சிறிது காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லாததால், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. சாலை முழுவதும் மாம்பழங்கள் சிதறி கிடந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருவாடானை அருகே சாலையில் கவிழ்ந்த மாம்பழம் ஏற்றிய லாரி appeared first on Dinakaran.

Tags : Thiruvadan ,Thiruvadanai ,Velankanni ,Kerala ,Thondi-Madurai National Highway ,Dinayathur ,Dinakaran ,
× RELATED திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் 2ம்...