×

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 19: மதுரையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கணக்கீட்டு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கோ.புதூரில் பகுதியில் அமைந்துள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு தலைவர் தனபாண்டி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், பல வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட கணினி பிரிண்டர் உள்ளிட்டவைகளை மாற்றி புதிதாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக நாகநாதன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Central Organization of Tamil Nadu Electrical Employees ,Puduril ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு