×

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

நெல்லிக்குப்பம், ஜூன் 19: நெல்லிக்குப்பம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பக்கிரி மகன் ராஜ் (55), மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று முஸ்லிம் மேட்டு தெருவில் வாஹித் என்பவரது மகன் அப்துல் ஹரீம் என்பவரது வீட்டில் உள்ள மரத்தில் ஏறி மரக்கிளைகள் கழிக்கும் வேலைக்கு சென்றுள்ளார்.

மரத்தின் மீது ஏறி கிளைகளை கழித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பின்புறம் பலத்த காயமடைந்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இது குறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Nellikuppam ,Pakiri ,Raj ,Anna Nagar ,Wahid ,Abdul Hareem ,Muslim Mattu Street ,Dinakaran ,
× RELATED கடலூரில் தாய், மகன், பேரன் கொலையில்...