×

சகோதரியுடன் சொத்து தகராறு; தண்ணீர் டேங்க் மீது ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் களியனூர் காலனியை சேர்ந்தவர் ஞானம் (50). இவர், தன் குடும்பத்தாருடன் சென்னை மேடவாக்கம் பகுதியில் தங்கி கட்டுமான பணி கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரி திருமணமாகி களியனுர் கிராமத்திலேயே குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சொத்துக்களை சரி பாதியாக பிரித்து தர வேண்டும் என தொடர்ந்து ஞானம் வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் மனமுடைந்த ஞானம் களியனூர் காலனி சுடுகாட்டு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து வாலாஜாபாத் போலீசார் மற்றும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஞானத்தை சமாதானப்படுத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இறங்க தொடர்ந்து வலியுறுத்தினர். இருப்பினும் இவர்களின் பேச்சை கேட்காத ஞானம் மேல்நிலை நீர் தாக்கத் தொட்டியில் இருந்து இறங்கி வர மறுத்துவிட்டார் இதனிடையே அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் இந்த பிரச்சனைக்கு நாங்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்கிறோம். எங்களிடம் நடந்த விபரங்களை இறங்கி வந்து கூறுங்கள் என வலியுறுத்தினர். இதனை அடுத்து மனம் இறங்கிய ஞானம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இறங்கி பத்திரிகையாளர்கள் முன்பு நடந்த விவரத்தை தெரிவித்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களும் ஞானத்திற்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சகோதரியுடன் சொத்து தகராறு; தண்ணீர் டேங்க் மீது ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Gnanam ,Kalyanur Colony ,Walajabad Union ,Medavakkam ,Chennai ,Kalyanur village ,
× RELATED நெசவு தொழிலாளி கொலையா ?