×

செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு கடன் சங்கத்தின் லாப தொகை அளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு கடன் சங்கத்தின் லாபத்தொகையினை சங்கங்களின் இணைப்பதவாளரிடம் வழங்கப்பட்டது. கல்பாக்கம் அணுசக்தித்துறை ஊழியர்கள், கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய கடன் சங்க லாபத்தொகையிலிருந்து செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு சேர வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ₹20,41,371 மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ₹13,60,914 மற்றும் ஆண்டு சந்தா ₹2000 என மொத்தம் ₹34,04,285 செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமாரிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் பாலாஜி, கண்காணிப்பாளர் வேணுகோபால், சங்கத்தின் செயலர் திருமுருகன், முதுநிலை கணக்காளர் கோவிந்தசாமி, ஒன்றிய மேலாளர் ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு கடன் சங்கத்தின் லாப தொகை அளிப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu District Co-operative Credit Society ,Chengalpattu ,Chengalpattu District Cooperative Union ,Kalpakkam ,Cooperative Savings ,Coin Credit Union ,
× RELATED பள்ளிக்கல்வித்துறை சார்பில்...