×

செங்கல்பட்டில் ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த, ஜமாபந்தி நிறைவுநாள் விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். செங்கல்பட்டு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433ம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) சுமார் 800 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் 12.6.2024 அன்று முதல் நடைபெற்று வரும் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்திருந்தனர். அம்மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நேற்று மனு அளித்த 68 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் காதொலி கருவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள், சலவை பெட்டிகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

மேலும், புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் சார்பில், 2 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க ₹8 லட்சம் மானியத்துடன் ₹46.62 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் வேலாயுதம், செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post செங்கல்பட்டில் ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Chengalpattu ,Collector ,Arunraj ,Revenue District Collector ,Chengalpattu District Collector ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஜமாபந்தி நிறைவு நாளில் 133...