×

வேளச்சேரியில் நேற்றிரவு டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

வேளச்சேரி: வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மருது பாண்டியர் சாலை சந்திப்பில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதிலிருந்து அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்தது. சிறிது நேரத்தில், டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயில் வெளியேறி கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு ராஜ்பவன் மின் நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் டிரான்ஸ்பார்மர் மீது மணல் கொட்டி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் அங்கு வந்த வேளச்சேரி தீயணைப்பு துறையினரும் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மேலும் டிரான்ஸ்பார்மரை குளிர்வூட்ட தண்ணீர் ஊற்றினர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், டிரான்ஸ்பார்மரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்வாரிய ஊழியர்கள் போராடி சரி செய்தனர்.

The post வேளச்சேரியில் நேற்றிரவு டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Velachery ,Tamil Nadu Housing ,Board ,Residence ,Marudu Pandyar Road ,
× RELATED காவலர் குடியிருப்புக்கு விவசாய நிலம்...