×

அரசு பள்ளிகளில் ஜாதி அடையாளங்களை உடனடியாக நீக்க நீதிபதி சந்துரு குழு பரிந்துரை!!

சென்னை: அரசு பள்ளிகளில் ஜாதி அடையாளங்களை உடனடியாக நீக்க நீதிபதி சந்துரு குழு பரிந்துரை செய்துள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை என்பது உள்பட ஜாதி அடையாளங்கள் பள்ளிகளின் பெயர்களில் இருக்கக்கூடாது. பள்ளிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களில் குறிப்பிடும்போதும் ஜாதி அடையாளங்கள் கூடாது. ஜாதிய அடையாளங்கள் இருக்காது என்ற உறுதிமொழியை பெற்ற பிறகே புதிய பள்ளி தொடங்க அனுமதி தர வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதி பெயர்களை நீக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

The post அரசு பள்ளிகளில் ஜாதி அடையாளங்களை உடனடியாக நீக்க நீதிபதி சந்துரு குழு பரிந்துரை!! appeared first on Dinakaran.

Tags : Justice Chanduru Committee ,CHENNAI ,Adi Dravidian Welfare Department ,Judge ,Sanduru ,Dinakaran ,
× RELATED சாதிய உணர்வை அகற்றுவது தொடர்பாக...