×

கோவையில் காரை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 5வது நபர் கைது

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் காரை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் ஐந்தாவது நபர் கைது செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த 4 பேர் ஏற்கெனவே கைதான நிலையில், விஷ்ணு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 14ம் தேதி அதிகாலை கோவை மாவட்டம் மதுக்கரை அருகே சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்றது. அந்த காரை வழிமறித்த மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி சித்திக் என்பவரின் காரை மறித்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது காரை வேகமாக இயக்கி கொள்ளையடிக்க வந்த நபர்களிடம் இருந்து தப்பித்தனர்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் குறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்கு பத்திவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இந்த சமத்துவத்தில் ஈடுபட்டவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கொள்ளை முயற்சி தொடர்பாக சிவதாஸ், ரமேஷ்பாபு, அஜய்குமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த விஷ்ணு என்ற நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாக உள்ள மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். காரில் ஹவாலா பணம் இருப்பதாக நினைத்து கொள்ளையடிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோவையில் காரை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 5வது நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Goa KOWAI ,GOWAI DISTRICT CHURCHYARD ,Vishnu ,Kerala ,Goa ,Dinakaran ,
× RELATED இந்த வார விசேஷங்கள்