×

அரியலூரில் வீட்டின் முன் நிறுத்திய பைக் திருட்டு

 

அரியலூர், ஜூன் 18: அரியலூரில் மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக்கை மர்மநபர் சைடு லாக்கை நைசாக திறந்து திருடிச்சென்றார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் நகரில் பழைய சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மருந்து விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு பல்சர் பைக்கை நிறுத்தி சைடு லாக் செய்துவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார்.

நேற்று காலை எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், வீட்டிலிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது, இரவு 1.40 மணியளவில் தெரு நாய்களை கல்லால் அடித்து விரட்டிவிட்டு, வந்த மர்மநபர் தன்னுடைய ஷூவை கழட்டிவிட்டு வெறும் காலுடன் நடந்து வந்து, பல்சர் வாகனத்தின் சைடுலாக்கை தனது கையால் உடைக்க முயற்சித்துள்ளார்.

அதில் தோல்வி அடைந்தவுடன், வாகனத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு, இரண்டு கால்களை வைத்து சைடுலாக்கை மிக லாவகமாக உடைத்து, பின்னர் தன்னுடைய ஷூவை பைக்கில் வைத்து திருடி சென்று விட்டார் . வீடியோ பதிவுடன் செந்தில்குமார் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அரியலூர் போலீசார் சிசிடிவி காட்சியை வைத்து திருடனை தேடி வருகின்றனர்.

The post அரியலூரில் வீட்டின் முன் நிறுத்திய பைக் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Senthilkumar ,Old Market Street ,Dinakaran ,
× RELATED இணையவழியில் நத்தம் பட்டா மாறுதல்...