×

இன்சூரன்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் 3 மாதம் சிறை

விருதுநகர், ஜூன் 18: விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் புதிய வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த வாகனங்கள் ரோடுகளுக்கு வரும் முன் ரோடு வரி, இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை செலுத்திய பின்னர் பதிவு எண் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் வருடம்தோறும் இன்சூரன்ஸ் செலுத்த வேண்டும். ஆனால் பல வாகன உரிமையாளர்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வருகின்றனர். இன்சூரன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனங்களை இயக்குவது குற்றம் என அரசுகள் எச்சரித்துள்ளது. மோட்டார் வாகன விதிகளின் படி வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு 3ம் தரப்பு காப்பீடு செய்வது அவசியம். இன்சூரன்ஸ் செய்யாதவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.

வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் வாகனங்களை இயக்கும் போது, கண்டிப்பாக ஓட்டுனர் உரிமம், வாகனத்திற்கு உரிய இன்சூரன்ஸ், புகை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் போலீசார் மூலம் அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் வாகனங்களை இயக்குவது மிகப்பெரிய குற்றமாகும். அவ்வாறு இயக்கும் நபர்களின் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் உள்ளது. எனவே, லைசென்ஸ் பெற்ற பின்னரே வாகனங்களை இயக்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

The post இன்சூரன்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் 3 மாதம் சிறை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநில...