×

மனைவியை வெட்டிய கணவன் கைது

சிவகாசி, ஜூன் 18:சிவகாசி அருகே திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி ரோடு முத்துமாரியம்மன் நகரை சேர்ந்தவர் பால்பாண்டி(26). இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பால்பாண்டி அடிக்கடி தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்து மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து மனைவியின் கழுத்து, முகத்தில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த முருகேஸ்வரி திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.

The post மனைவியை வெட்டிய கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Balpandi ,Muthumariamman Nagar, Thiruthangal Sukrawarpatti Road ,Murugeswari ,
× RELATED சிவகாசி மாநகராட்சியில் 84 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்