×

பள்ளியில் ரத்ததான தினம்

காளையார் கோவில், ஜூன் 18: காளையார் கோவில் அருகே அரசுப் பள்ளியில் ரத்த தான தினம் கொண்டாடப்பட்டது. காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக ரத்ததான தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியை அமல தீபா வரவேற்றார். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் காளையார்கோவில் கிளை துணைத் தலைவர் ஆரோக்கியசாமி ரத்த தான தினத்தின் வரலாறு குறித்து எடுத்துரைத்தார். ரத்தத்தை தானம் செய்யும் தன்னார்வலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. ரத்த தானம் செய்ய வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவன் நவீன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் மீனாட்சி, ராஜபாண்டி, கமலாபாய் கலந்துகொண்டனர்.

The post பள்ளியில் ரத்ததான தினம் appeared first on Dinakaran.

Tags : Blood donation day ,Kalaiyar Temple ,World Blood Donation Day ,Geezakottai Panchayat Union Middle School ,Kalayarkovil Union ,Head ,Deivanai ,Dinakaran ,
× RELATED உலக ரத்ததான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி