×

மல்லிகையில் மகசூல் பெறும் வழிகள்

மதுரை, ஜூன் 18: மல்லிகை செடிகளில் மழை மற்றும் பனிக்காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு, மற்றும் வேர்ப்புழு தாக்குதல் உண்டாகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் வல்லுநர்கள் கூறியதாவது: தொடர்மழைக்காலம் என்பதால் மல்லிகை செடிகளில் வேரழுகல் மற்றும் பூஞ்சாண நோய் பாதிப்பு ஏற்படும். இதனை தடுக்க செடியின் வேர்ப்பகுதியை சுற்றியுள்ள மண்ணில் தாமிர ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராமினை ஒரு லிட்டர் நீரில் கலந்து வேர்ப்பகுதி நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும். இரும்புசத்து குறைபாட்டை போக்க, 5 கிராம் இரும்பு சல்பேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை இலை வழியாக தெளிக்கலாம். வேர்ப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த 5 கிராம் ப்யூர்டான் குருணை மருந்தை செடியைச் சுற்றிலும் இட்டு மண்ணுடன் கலந்து நீர்பாய்ச்ச வேண்டும். பொதுவாக நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களில் மல்லிகை பயிர் சாகுபடி செய்வதால் வேரழுகல் நோய் ஏற்படாமல் கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு கூறினர்.

The post மல்லிகையில் மகசூல் பெறும் வழிகள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...