×

ஐடி அதிகாரிகள் என கூறி ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம், நகை கொள்ளை

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் மதுரைவீரன் (64). ஜவுளி வியாபாரி. இவர் திருப்பூரில் மொத்தமாக ஜவுளி வாங்கி வந்து கிராமம் கிராமமாக சென்று விற்பனை செய்கிறார். நேற்று காலை திருப்பூர் செல்வதற்காக வீட்டிலிருந்து மதுரைவீரன் புறப்பட்டு சென்றார். இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் 5 பேர், அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த சகோதரி கிருஷ்ணவேணியிடம் தாங்கள் வருமானவரி துறையிலிருந்து இருந்து வருகிறோம். வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. எனவே உங்கள் வீட்டை சோதனையிட உள்ளோம் என்று கூறினர்.

இதில் கிருஷ்ணவேணி அருகில் ஒருவர் நின்றுகொண்டார். மற்றொருவர் பீரோ சாவியை வாங்கி திறந்து அதில் இருந்து 5 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து சென்றனர். இந்நிலையில் செல்போனை மறந்து வைத்துவிட்டு சென்ற மதுரைவீரன் சிறிதுநேரத்தில் வீட்டுக்கு வந்த போது அவரிடம் நடந்த சம்பவத்தை கிருஷ்ணவேணி கூறியுள்ளார். வருமான வரிதுறை அதிகாரிகள் போல் வந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post ஐடி அதிகாரிகள் என கூறி ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம், நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Maduraiveeran ,Thuraiur Market Street ,Trichy District ,Tiruppur ,Madurai ,Dinakaran ,
× RELATED சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது