×

திருச்சி அருகே பயங்கரம் காதலை ஏற்க மறுத்த பெண் கொடூர கொலை: வாலிபர் கைது

சமயபுரம்: திருச்சி அருகே கள்ள காதலை ஏற்க மறுத்த பெண்ணை ஓட ஓட விரட்டி சரமாரி குத்தி கொலை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார்(48). சலவை தொழிலாளி. இவரது மனைவி சுமதி(42). இவர்களுக்கு லோகேஷ்வரன் (19), சுப(14) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக ரவிக்குமாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி சுமதி திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இதையடுத்து ரவிக்குமாரின் தம்பியின் நண்பரான வாழ்மானபாளையம் தெற்கு பகுதியை சேர்ந்த கொத்தனார் மாரிமுத்து (30) என்பவர் அடிக்கடி ரவிக்குமாரின் வீட்டிற்கு வர போக இருந்துள்ளார். இதில் மாரிமுத்து, சுமதியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் மாரிமுத்து சுமதியின் செல்போன் நம்பரை மறைமுகமாக தெரிந்து கொண்டு தொல்லை கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக சுமதி, தனது கணவர் ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மாரிமுத்துவை கண்டித்துள்ளனர். இதனால் சுமதியின் வீட்டிற்கு மாரிமுத்து செல்வதை நிறுத்தி விட்டார்.

பின்னர் மாரிமுத்து, சுமதியை வழியில் பார்க்கும் போது பேசுமாறு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சுமதி வேலைக்கு செல்லும் போது சிறுகாம்பூர் பஸ் நிலையத்தில் வழி மறித்த மாரிமுத்து அவரிடம் பேச முயன்றார். ஆனால் சுமதி பேசாமல் மறுத்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட ஓட விரட்டி சுமதியை சரமாரியாக குத்திவிட்டு தப்பித்து ஓடி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுமதி இறந்தார். இதுகுறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி அருகே பயங்கரம் காதலை ஏற்க மறுத்த பெண் கொடூர கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Samayapuram ,Ravikumar ,Sirukampur ,Mannachanallur ,Trichy district ,Laundromat ,Sumathi ,
× RELATED திருச்சி அருகே பயங்கரம் காதலை ஏற்க மறுத்த பெண் கொடூர கொலை: வாலிபர் கைது