×

நடுவழியில் பழுதாகி நின்ற ஜல்லி பேக்கிக் ரயில் பெட்டி

தர்மபுரி, ஜூன் 18: ஓமலூர் அருகே ஜல்லி பேக்கிக் ரயில் பெட்டி நடுவழியில் பழுதாகி நின்றதால், சுமார் நான்கரை மணி நேரம் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம்- பெங்களூரு மார்க்கத்தில் தினசரி 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் தண்டவாளத்தில் ஜல்லி கற்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று பிற்பகல் 2 மணியளவில், ஓமலூர்-காருவள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே ஜல்லி பேக்கிங் செய்யும் ரயில் பெட்டி, சக்கரத்தின் ஜாக்கி மெக்கானிக்ஸ் கோளாறு ஏற்பட்டு நடு வழியில் நின்றது.

இதுகுறித்த தகவலின்பேரில், சேலம் ரயில் நிலையத்தில் இருந்து சம்பவ இடம் விரைந்த ரயில்வே ஊழியர்கள் கோளாறினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாலை 6.35 மணிக்கு ஜல்லி பேக்கிங் செய்யும் ரயில் அங்கிருந்து சேலத்திற்கு புறப்பட்டுச் சென்றது. சுமார் நான்கரை மணி நேரமாக நடுவழியில் அந்த ரயில் நின்றதால், சேலம்-பெங்களூரு மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் வந்த காரைக்கால்-பெங்களூரு ரயில் மற்றும் எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் ஆகியவை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால், அந்த ரயில்களில் வந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

The post நடுவழியில் பழுதாகி நின்ற ஜல்லி பேக்கிக் ரயில் பெட்டி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Jalli Bagg ,Omalur ,Salem-Bangalore ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது